அதிகாரங்கள்

மேல் மாகாணத்தில் கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு உரிய கீழ் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பாக செயற்படுவதற்கு மற்றும் நியமங்களை வழங்குவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

###

 •  கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களை ஆட்சேர்த்தல் மற்றும் பதவியுயர்த்தல் தகைமைகள், முறைமைகள் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானித்தல்.
 • கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களை ஆட்சேர்ப்பதற்கான பரீட்சைகளை நடாத்துதல் அல்லது பரீட்சை நடாத்தும் பணிக்காக பரீட்சகர் குழுவினை நியமித்தல் மற்றும் பரீட்சைகளில் தோற்றும் பரீட்சார்த்திகளிடமிருந்து கட்டணம் அறவிடல்.
 • பதவிகளுக்கு வழங்கப்படவேண்டிய சம்பள அளவுத்திட்டத்தினை நிர்ணயித்தல், காலத்திற்குக் காலம் திருத்தஞ் செய்தல் மற்றும் தயாரித்தல்
 • கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் போது ஆணைக்குழுவிற்கு ஆதரவு வழங்கக் கூடிய ஆலோசனை வழங்கல் அமைப்புக்களை நிறுவுதல்.
 • ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட சம்பள அளவுத்திட்டத்தின் படி சம்பளங்களைச் செலுத்துமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு விதித்தல். ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமையினைச் செயற்படுத்தும் போது கூட்டுறவு சங்கமொன்றினால் பின்பற்ற வேண்டிய படிமுறைகளைத் தீர்மானித்தல்.
 • ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கால வரையறைக்குள் ஊழியர்களுக்கு எதிராக உள்ள ஒழுக்காற்று விசாரணைகளை முடித்துக் கொள்ளும்படி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உத்தரவிடல்.
 • கூட்டுறவுச் சங்கம் ஒன்றினால் வழங்கப்பட்ட ஒழுக்காற்று உத்தரவிற்கு எதிராகத் தொடுக்கப்படும் மேன்முறையீட்டினை விசாரித்தல்.
 • ஊழியர்கள் சார்பாக உரிய குறிப்பிட்ட பதிவுகளை வைத்துக் கொள்ளுமாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கு விதித்தல்.  
 • எவரேனும் ஊழியர் ஒருவர் குறித்து ஆணைக்குழுவிற்கு அவசியமேற்படும் எனக் கருதுக்கூடிய கோவைகள் அல்லது ஆவணங்கள் அல்லது தகவல்களைக் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் ஒப்படைக்கும் படி உரிய சங்கத்திற்கு அறிவுறுத்தல்.
 • ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட சம்பள அளவுத்திட்டத்தின் படி சம்பளங்களைச் செலுத்துமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு விதித்தல். ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமையினைச் செயற்படுத்தும் போது கூட்டுறவு சங்கமொன்றினால் பின்பற்ற வேண்டிய படிமுறைகளைத் தீர்மானித்தல்.
 • ஏதேனும் ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் ஊழியர் ஒருவரின் நடத்தை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக ஊழியரால் சங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்துள்ள சந்தர்ப்பத்தில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வது குறித்து அறிவுறுத்தல் உட்பட அவ் ஊழியர் சம்பந்தமாக ஆணைக்குழுவினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை செயற்படுத்துமாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கு உத்தரவிடல்.
 • ஊழியர்களின் சேவை முடிவடைகையில் பணிக்கொடையாகவோ அல்லது வேறு நன்மைகளாகவோ அவர்களுக்கு வழங்கக்கூடிய கொள்கைகளை சாதாரண கொள்கைகளுக்கு இணங்க நிர்ணயித்தல்
 • கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழச் சட்டவாக்கத்தினை அமுல்படுத்துகையில் ஏதேனும் கூட்டுறவு சங்கம் ஒன்றினையோ அல்லது சங்கக் குழுவொன்றினையோ விடுவிக்கும் தொடர்பில் ஆணையாளரை விசாரித்து விடயப் பொறுப்பு கௌரவ அமைச்சருக்கு அறிவுரை வழங்குதல்.
 • மாகாண சபையின் அனுமதியைப் பெற்ற பின்னர் விடயப் பொறுப்பு கௌரவ அமைச்சர் அவர்களினால் வெளியிடப்படும் வரத்தமானிப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள கட்டளை ஒன்றினால் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படக் கூடிய கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அவற்றின் ஊழியர்களுக்கும் உரிய வேறு அதிகாரங்களைச் செயற்படுத்துதல்.
 • மேற்படி அதிகாரங்களைச் செயற்படுத்தும் போது, ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் ஏதேனும் தீர்மானங்கள் அல்லது நிர்ணயங்கள், மாற்றங்கள், உடபுகுத்தல்கள், திருத்தங்கள் அல்லது நீக்கங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளுதல்.