ஆரம்பம் மற்றும் வளர்ச்சி

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் 17:4 பிரிவின் கீழ் தொகுக்கப்பட்ட மேல் மகாண சபையின் 1994 இல 01 கொண்ட மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. இச்சட்டம் 1991 செப்தெம்பர் 01 ஆந் திகதி முதல் செயற்படுத்தப்படுகின்றது.

மேல் மாகாண தெருக்கள், போக்குவரத்து கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் வர்த்தகம், வீடமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சின் கீழ் செயல்படும் திணைக்களமாவதுடன், நிர்வாகப் பிரதேசம் மூன்று மாவட்டங்களைக் கொண்டது. அவை கொழும்பு, கம்பஹ, களுத்துறை ஆகிய மாவட்டங்களாகும்.

ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்

மேல் மாகாண கூட்டுறவு விடயப் பொறுப்பு கௌரவ அமைச்சரால் நியமிக்கப்பட்ட மூவரை ஆணைக்குழு கொண்டுள்ளதுடன், ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார். அவர்களது பதவிக் காலம் 03 வருடங்களாகும்.

தற்போதைய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்

கௌரவ தலைவர்                     திரு. ஏ.எஸ். ஜோசப்

கௌரவ உறுப்பினர்              திரு. எஸ். தில்ஷன் சின்தக பெர்னாண்டோ

கௌரவ உறுப்பினர்               திரு. சரச்சந்திர மொன்டேகு

பணிக்குழாம்

கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் உத்தியோகத்தர் ஒருவராக இருக்க வேண்டியதுடன், அவருக்கு உதவும் மகமாக மேல் மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களைக் கொண்ட பணிக்குழாம் ஒன்றாக இருத்தல் வேண்டும்.

மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பணிக்குழாம் 17 உத்தியோகத்தர்களைக் கொண்டுள்ளதுடன், ஆணைக்குழுவின் தற்போதைய செயலாளராக இலங்கை நிர்வாகச் சேவையின் உத்தியோகத்தர்,திருமதி எஸ்.ஜே.ஜெயசிங்க பணியாற்றுகின்றார்.

பதவிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 

செயலாளர் 1
நிர்வாக உத்தியோகத்தர் 1
விசாரணை உத்தியோகத்தர் 2
அபிவிருத்தி உத்தியோகத்தர் 4
முகாமைத்துவ உதவியாளர் 6
சாரதி 1
அலுவலக உதவியாளர் 2