•    1994 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சட்டவாக்கம்

•    1972ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்

•    1972ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சட்டத்தின் கீழான திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்

•    கூட்டுறவு ஊழியர் பணிநிலை விதிகள்

•    இது தொடர்பிலான விதிகள் 1/99 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒழுக்காற்று விசாரணை ஒன்றின் தண்டனையாக சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக அல்லது சேவையை விட்டுச் சென்றதாகக் கருதப்படும் ஒருவருக்குப் பணிக்கொடை உரித்தாகாது. அவ்வாறே, ஒப்பந்த அடிப்படையில் பணி புரிபவர்களுக்கும் பணிக்கொடை உரித்தாகாது.

•    அவை தவிர, ஒய்வு பெறுவதால்இ கட்டாய ஓய்வு பெறப்படுவதால், இராஜினாமா செய்வதால், சேவையை இடை நிறுத்துவதால் அல்லது ஏதேனும் முறையினால் வேலையை இழந்த கூட்டுறவு ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக 05 வருட காலம் பணியினைப் பூரணப்படுத்தி இருந்தால்இ கூட்டுறவு ஊழியர் பணிநிலை விதியில் 3: 1: 9, 3: 1: 10, 3: 1: 12, 3: 5: 3 ஆகிய விதிகளின் பிரகாரம் அவருக்குப் பணிக்கொடை உரித்தாகும்.

•    மாதாந்த சம்பளம் பெறும் ஊழியர்களும் துண்டு வீத சம்பளம் பெறும் ஊழியர்களும் மேற்படி விதிகளின் கீழ் பணிக்கொடைக்கு உரித்தாவர்.

பணிக்கொடை கணிக்கப்படும் முறை கீழே தரப்பட்டுள்ளது.

கடைசியாகப் பெற்ற கொடுப்பனவுகளுடனான சம்பளம்  சேவைக் காலம்  ( முழு வருட எண்ணிக்கை)

  • பதில் வேலைப் பார்க்கும் பதவி, பதில் வேலைப் பார்க்கும் உத்தியோகத்தரின் நிரந்தர பதவியை விட உயர்வான அல்லது சமமான பதவியாக இருத்தல் வேண்டும். ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகத்தராக இருக்க வேண்டியதுடன், பதில் வேலை செய்வதற்கான தகைமையினைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். பதில் வேலைப் பதவி அனுமதிக்கப்பட்ட, வெற்றிடம் கொண்ட பதவியாக இருப்பதுடன், பதில் வேலை பார்க்கும் உத்தியோகத்தர் ஒரு மாதத்தையும் விடக் கூடுதலான காலம் அப்பதவியில் பதில் வேலை செய்திருத்தல் வேண்டும்.
  • அவ்வாறு பதில் வேலை நியமனங்களை அனுமதித்துக் கொண்டதன் பின்னர், கீழ்வருமாறு பதில் வேலைக் கொடுப்பனவைக் கணக்கிட்டுச் செலுத்தலாம்.
  • நிரந்தர பதவிக்கு மேலதிகமாக உயர் பதவியில் பதில் வேலை செய்யும் போது, நிரந்தர பதவியின் சம்பளத்திற்கு மேலதிகமாக, பதில் வேலை பதவியின் ஆரம்ப அடிப்படை சம்பளத்தில் ¼ உம், நிரந்தர பதவியில் வேலை செய்யாது பதில் வேலை மாத்திரம் செய்வதெனின், பதில் வேலை செய்யும் பதவியின் ஆரம்ப அடிப்படை சம்பளத்தில் ½ மற்றும் நிரந்தர பதவியின் ஆரம்ப அடிப்படை சம்பளத்தில் ½ , நிரந்தர பதவியில் ஈட்டியுள்ள எல்லா சம்பள உயர்வுகளும்

சுற்றறிக்கை இல: 07/2004 இன் பிரகாரம், நிரந்தர, தற்காலிக, சமயோசித அல்லது பயிலுனர் பெண் ஊழியர் ஒருவரின் பிரசவத்திற்கு 84 வேலை செய்யும் நாட்களுக்கு முழுச் சம்பளத்துடன் பிரசவ விடுமுறை உரித்தாகும். பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

பெண் ஊழியரின் கர்ப்ப காலம் 5 மாதங்களைக் கடந்ததன் பின்னர், பிரசவம் வரை சாதாரண அலுவலக நேரத்திற்கு அரை மணித்தியாலம் தாமதித்து அலுவலகத்திற்கு வருவதற்கும், அரை மணித்தியாலம் நேரகாலத்துடன் அலுவலகத்தை விட்டு வெளியேறவும் அனுமதித்தல் வேண்டும்.

அவ்விடுமுறை முடிவடைந்ததன் பின்னர், பிள்ளைக்கு 06 மாதங்கள் பூரணமடையும் வரை ஒரு மணித்தியாலம் நேரகாலத்துடன் அலுவலகத்தை விட்டு வெளியேற அனுமதித்தல் வேண்டும்.

ஆரம்ப விசாரணையின் பின்னர், எவரேனும் ஊழியர் ஒருவருக்கு எதிராகக் குற்றம் தொடுக்கப்பட்டு முறையான ஒழுக்காற்று விசாரணை ஒன்றினை நடாத்துவதற்கு பணிப்பாளர் சபை தீர்மானிக்கும் சந்தர்ப்பத்தில் 06/2004 சுற்றறிக்கையின் பிரகாரம்,

1. அப்பணிப்பாளர் சபைத் தீர்மானம்,

2. ஆரம்ப விசாரணையின் பரிந்துரைகள்

குற்றப்பத்திர வரைவு மற்றும் உரிய குற்றஞ் சாட்டப்பட்டவர் ஆணைக்குழுவின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் எனின், அந்நியமனக் கடிதத்தின் பிரதி ஆகியவற்றை ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பித்து, ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.

கூட்டுறவுச் சங்க சட்டவாக்கத்தின் 46(1) இன் கீழ் நடாத்தப்படும் விசாரணை அல்லது 47(1)இன் கீழ் நடாத்தப்படும் ஆவணப் பரிசீலனை அல்லது 47(2)இன் கீழ் நடாத்தப்படும் விசாரணை ஆகியவற்றால் பரிந்துரைகள் பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பத்தில் ஆரம்ப விசாரணையின்றி முறையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் முறை சுற்றறிக்கை இல: 11/2005இன் பிரகாரம் ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முறையான ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் விடுக்கப்படும் ஒழுக்காற்று கட்டளைக்கு எதிராக கூட்டுறவு ஊழியர் ஒருவரால் அல்லது அவர் சார்பாக ஏதேனும் தொழிற் சங்கத்தினால்  ஒழுங்குவிதிகள் 135இன் கீழ் ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யலாம்.

ஒழுக்காற்றுக் கட்டளை விடுக்கப்பட்ட நாள் முதல் 06 மாதத்திற்குள் v ஆவது பின்னிணைப்பில் தரப்பட்டுள்ள படிவத்தினைக் கொண்டு மேல்முறையீட்டினைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

அம்மேல் முறையீட்டினை விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்ததன் பின்னர், உரிய கூட்டுறவுச் சங்கத்திடமிருந்து ஒழுக்காற்று விசாரணைக்குரிய எல்லா ஆவணங்களும் தருவிக்கப்பட்டு பரிசீலிக்கப்படும். அதன் பின்னர், தேவைப்படின், இரு தரப்பினரையும் ஆணைக்குழுவிற்கு வரவழைக்கப்பட்டு மேன்மேறையீட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

ஆணைக்குழுவினால் மேன்முறையீட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் முதல் 60 நாட்களுக்குள் மீண்டும் ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்ய முடிவதுடன், ஆணைக்குழு திருப்தியுறும் வண்ணம் விடயங்கள் இருந்தால் மாத்திரம் அம்மேன்முறையீடு மீண்டும் விசாரணை செய்யப்படும்.

நியாயமான காரணமின்றி கடமைக்கு வருகைத் தராதிருத்தல்

1.  நியாயமான காரணமின்றி கடமைக்குத் தாமதித்து வரல்.

2. நியாயமான காரணமின்றி தாமதமாக வேலை செய்ய வருகிறார்

கடமையில் ஈடுபட்டிருக்கும் போது சோர்வுற்றிருத்தல் மற்றும் கவனமற்று இருத்தல்

தமது பணி குறித்து சட்டரீதியாகக் கிடைக்கப் பெறும் கட்டளைகளைப் பின்பற்றுபற்றுதில் வேண்டுமென்றே தவறுதல்.

வர்த்தக நடவடிக்கைகளுக்காக பணிமனைக்கு வருகைத் தரும் பொதுமக்களிடம் முறைக்கேடாக நடத்தல்.

நொண்டிச் சாக்குகளைக் கூறி கடமைகளைத் தட்டிக்கழித்தல்.

பணிமனையின் பொறுப்பாளரின் முன் அனுமதியின்றி அதனுள் பணிக்கு சம்பந்தமற்ற பிரசுரங்கள், விளம்பரக் கையேடுகள், சுவரொட்டிகள் என்பனவற்றைப் பகிர்தல் மற்றும் காட்சிப்படுத்தல்.

பணிமனையினைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அளிக்கபட்ட அறிவுறுத்தல்களை மீறுதல்.

தொழில்தருநரினால் புகைத்தல் தடுக்கப்பட்டுள்ள பணிமனையின் ஏதேனும் பகுதியில் புகைத்தல்.

ஊழியரின் கவனமின்மையினால், வேண்டுமென்று அல்லது தவறுதலால் ஏற்பட்டுள்ள நேரடியான நட்டம் அல்லது சேதம் ஒன்றினை தொழில்தருநரின் பொறுப்பிலுள்ளவை அல்லது அவருக்குச் சொந்தமானவை அல்லது பொருட்கள் தொடர்பில் ஏற்படுத்துதல்.

வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுத்தல் அல்லது ஒழுங்குகளை மீறுதல்

கூட்டுறவுச் சங்கத்திற்குரிய வளவினுள் உள்ள பொருட்களை அல்லது ஏனையவற்றைத் திருடுதல் மற்றும் தொழில்தருநரின் வர்த்தகம் தொடர்பில் மோசடி செய்தல் மற்றும் நேர்மையற்று இருத்தல்.

நற்பெயருக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பிலான தவறுக்குத் தண்டனைப் பெறல்.

இலஞ்சம் வாங்குதல் மற்றும்; கொடுத்தல், வேறு சட்டரீதியற்ற கொடுப்பனவொன்றினைக் கொடுத்தல்

நிறுவனத்தினுள் கடமை நேரத்தில் முறைக்கேடாக அல்லது தொந்தரவு மிக்கதாக நடந்து கொள்ளுதல்.

கடமையில் இருக்கும் போது தூங்குதல் (காவலாளிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பிலாயின், கடமையில் இருக்கும் போது தூங்குதல் அல்லது பணிமனையிலிருந்து வெளியேறி இருத்தல்)

கடமையில் இருக்கும் போது மதுவருந்தி இருத்தல்

பணிமனையினுள் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பில் முறையற்ற விதத்தில் தலையிடுதல்

சங்கத்தின் வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் குறித்து உண்மையான மற்றும் சரியான விபரங்களை வழங்குவதற்குத் தவறுதல்.

கணக்குகளைத் தவறாகக் காட்டுதல்

ஊழல்களை மறைத்தல்

நம்பிக்கைத் துரோகஞ்செய்தல்

சங்கத்தின் நற்பெயருக்கு பங்கம் விளையுமாறு நடந்து கொள்ளுதல். அதாவது, விலைக் கட்டுப்பாட்டு அல்லது உணவுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களின் கீழ் அல்லது பொருட்கள் விநியோகித்தல் முறைமையின் கீழ் விதிக்கப்பட்ட சட்டங்கள் அல்லது ஒழுங்குவிதிகள் அல்லது கட்டளைகள் அல்லது அது போன்ற செயலுக்கு உதவுதல் அல்லது ஆதரவளித்தல்.

1. கண்டனஞ் செய்தல்

2. கடுமையாகக் கண்டனஞ் செய்தல் அல்லது குற்றஞ்சாட்டுதல்

ஒரு வருடத்திற்கு மேற்படாத காலவறைக்கு சம்பள உயர்வினை நிறுத்துதல் அல்லது குறைத்தல் அல்லது பிற்போடுதல்

1. ஒழுக்காற்று இடமாற்றலாக அலுவலரின் செலவில் அவரை வேறு ஓர் இடத்திற்கு மாற்றஞ் செய்தல்.

2. ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் மேலதிகக் கட்டணமொன்று அறவிடுதல்.

3. ஒரு கிழமை சம்பளத்திற்கு மேற்படாத தண்டப்பணம் அறவிடுதல்.

கடுமையான தண்டனைகள்

1. பணியிலிருந்து நீக்குதல்

2. வேலையை நிறுத்துதல்

3. கட்டாய ஓய் பெறச்செய்தல்

4. சிரேஷ்ட நிலையிலிருந்து பதவியிறக்குதல் (அதாவது, உத்தியோகத்தரை இருக்கும் தரத்திலிருந்து குறிப்பிட்ட படித்தரங்கள் பலவற்றிற்கு கீழிறக்குதல்.

5. பதவிநிலையிலிருந்து கீழிறக்குதல். ( அவர் இருக்கும் சேவையின் அடுத்த கீழ் சம்பளப் படிநிலைக்கு மீண்டும் நிலைநிறுத்துதல்.)

6. ஒரு வருடத்திற்கு மேற்படாத காலவறைக்கு ஒரு சம்பள உயர்வினையோ அல்லது அதனை அதிகமாகவோ நிறுத்துதல் அல்லது குறைத்தல் அல்லது பிற்போடுதல் .

7. குறிப்பிட்ட காலம் வரை பதவியுயர்வுகளைப் பிற்போடுதல்.

8.  குறிப்பிட்ட காலம் வரை எவ்வித பதவியுயர்வுப் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தகுதியற்றவராக்குதல்.

  • 2016-01-01 ஆந் திகதி முதல் மேல்மாகாணக் கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு 2/2018 சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ள சம்பளப் படிநிலைகளே செயற்படுத்தப்படுகின்றன. அச்சம்பளப்படிநிலைகளை சம்பள மாற்றியமைப்பு மேற்கொள்ளும் முறை குறித்து அறிவுறுத்தல்கள் 08/2015 சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • அவ்வாறேஇ எல்லா கூட்டுறவு ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பளத்தின் 15% கொடுப்பனவொன்றும், 2,500 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவொன்றும் செலுத்துவதற்கு 08/2015 சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.