ஒழுக்காற்று கட்டளைகளுக்கு எதிராக 135 விதிகளின் கீழ் முன்வைக்கப்படும் மேன்முறையீடுகளை விசாரணை செய்து உத்தரவூகளைப் பிறப்பித்தல்..
ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கால வரையறைக்குள் ஊழியர்களுக்கு எதிராக உள்ள ஒழுக்காற்று விசாரணைகளை முடித்துக் கொள்ளும்படி கூட்டுறவூச் சங்கங்களுக்கு உத்தரவிடல்.
கூட்டுறவூச் சங்கம் ஒன்றினால் வழங்கப்பட்ட ஒழுக்காற்று உத்தரவிற்கு எதிராகத் தொடுக்கப்படும் மேன்முறையீட்டினை விசாரித்தல். ஊழியர்கள் சார்பாக உரிய குறிப்பிட்ட பதிவூகளை வைத்துக் கொள்ளுமாறு கூட்டுறவூச் சங்கங்களுக்கு விதித்தல்.
எவரேனும் ஊழியர் ஒருவர் குறித்து ஆணைக்குழுவிற்கு அவசியமேற்படும் எனக் கருதுக்கூடிய கோவைகள் அல்லது ஆவணங்கள் அல்லது தகவல்களைக் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் ஒப்படைக்கும் படி உரிய சங்கத்திற்கு அறிவூறுத்தல்.
ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட சம்பள அளவூத்திட்டத்தின் படி சம்பளங்களைச் செலுத்துமாறு கூட்டுறவூ சங்கங்களுக்கு விதித்தல். ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமையினைச் செயற்படுத்தும் போது கூட்டுறவூ சங்கமொன்றினால் பின்பற்ற வேண்டிய படிமுறைகளைத் தீர்மானித்தல்.