வணக்கம்

இலங்கை மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

13ஆவது அரசியலமைப்பின் 17.4 பிரிவின் கீழ் தொகுக்கப்பட்ட. 1994ஆம் ஆண்டு 01ஆம், இலக்க மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சட்டவாக்கத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், மேல் மாகாணத்தினுள் செயற்படும். கூட்டுறவுச் சங்கங்களில் பணி புரியும் ஊழியர்கள் தொடர்பில் நிர்வாகச் செயற்பாடுகளை அமுல்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கும், அவ் ஊழியர்களினால் முன்வைக்கப்படும் மேன்முறையீடுகள் தொடர்பில் மேன் முறையீட்டு நிதிமன்றமாக செயற்படுவதற்கும் ஆணைக்குழு நிறுவப்பட்டது.

எமது நோக்கு

வினைத்திறன் மிக்க சேவைக்காக அர்ப்பணிப்பு மிக்க, திருப்தியான கூட்டுறவு, ஊழியர் சமூகத்தினை உருவாக்குதல்

எமது பணி

நல்லாட்சியினை உறுதிப்படுத்தும் சட்டரீதியான சட்டகத்தினுள் தாபனஞ்சார் வளங்களை விளைபயன்மிக்கதாகப் பிரயோகித்து, மேல் மாகாண கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள் பதவியுயர்வுகள், சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியவை சம்பந்தமான பணிகளை நெறிப்படுத்துதல் மற்றும் அவ் ஊழியர்களின் மேன்முறையீடுகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமனறமாகச் செயற்படுதல்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்காக நடாத்தப்பட்ட கூட்டுறவு ஒழுங்கு விதி முறைகள் மற்றும் சங்க ஊழியர்களின் பிரச்சினைகளை அமைடயாளம் காணும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உருவாக்கத் திட்டம் – 20.06.2024
2024 புத்த ரஷ்மி வெசாக் விழாவை முன்னிட்டு அரச அலுவலகர்களுக்கான புலனுணர்வு கவனத்தின்பால் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2024.05.24 ஆம் திகதி அலுவலகத்தின் அலுவலகர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் திட்டம்.