சேவைகள்
  • ஆட்சேர்ப்பு மற்றும் பதவியூயர்வு தகைமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் அவை குறித்து சேவை நிபந்தனைகளையும் முறைமைகளையும் தீர்மானித்தல்.
  • கூட்டுறவு ஊழியர்களின் நியமனங்களை அங்கீகரித்தல்
  • பதில் மற்றும் ஒப்பந்த நியமனங்களை அங்கீகரித்தல் .
  • கூட்டுறவு ஊழியர்களை பதவி உயர்த்துதல்.
  • இடமாற்றம் செய்தல்.
  • சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளைத் தீர்மானித்தல்.
  • நேர்முகப் பரீட்சைகளை மேற்பார்வை செய்தல்.
  • ஆட்சேர்ப்பு அறிவித்தல்களுக்கு அனுமதி வழங்கல் .
  • கூட்டுறவு ஊழியர்களின் ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு, இடமாற்றம், விடுமுறை, சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள், பணிக்கொடை கொடுப்பனவுகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அறிவுறுத்தல்கள் வழங்குதல்..
  • சங்கங்களில் ஊழியர் நிர்வாகத்திற்குரிய நடவடிக்கைகளைத் தேடிப்பார்த்தல்.
  • ஊழியர்களால் முறையீடுகளை விசாரணை செய்தல்.
  • ஒழுக்காற்று கட்டளைகளுக்கு எதிராக 135 விதிகளின் கீழ் முன்வைக்கப்படும் மேன்முறையீடுகளை விசாரணை செய்து உத்தரவுகளைப் பிறப்பித்தல்.

###########################

  • ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கால வரையறைக்குள் ஊழியர்களுக்கு எதிராக உள்ள ஒழுக்காற்று விசாரணைகளை முடித்துக் கொள்ளும்படி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உத்தரவிடல்.
  • கூட்டுறவுச் சங்கம் ஒன்றினால் வழங்கப்பட்ட ஒழுக்காற்று உத்தரவிற்கு எதிராகத் தொடுக்கப்படும் மேன்முறையீட்டினை விசாரித்தல். ஊழியர்கள் சார்பாக உரிய குறிப்பிட்ட பதிவுகளை வைத்துக் கொள்ளுமாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கு விதித்தல்.
  • எவரேனும் ஊழியர் ஒருவர் குறித்து ஆணைக்குழுவிற்கு அவசியமேற்படும் எனக் கருதுக்கூடிய கோவைகள் அல்லது ஆவணங்கள் அல்லது தகவல்களைக் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் ஒப்படைக்கும் படி உரிய சங்கத்திற்கு அறிவுறுத்தல்.
  • ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட சம்பள அளவுத்திட்டத்தின் படி சம்பளங்களைச் செலுத்துமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு விதித்தல். ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமையினைச் செயற்படுத்தும் போது கூட்டுறவு சங்கமொன்றினால் பின்பற்ற வேண்டிய படிமுறைகளைத் தீர்மானித்தல்.