கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவர் திரு. எச்.ஏ. ஹெட்டிஆரச்சி அவர்களின் செய்தி ..
############################
1994 இல 01 கொண்ட மேல் மாகாணத்தில் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட, மேல் மாகாணத்தில் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு குறிப்பிட்ட சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கு உரிய அதிகாரத்தினைக் கொண்டுள்ளது.
############################
மேல் மாகாணத்தில் பதிவுசெய்துள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணி புரியும் கூட்டுறவு ஊழியர்களின் ஆட்சேர்ப்பு, மற்றும் பதவியுயர்வு செய்னமுறைகளை விதித்தல், நியமனங்களை அனுமதித்தல், இடமாற்றங்கள்,சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை விதித்தல், சேவை பிரச்சினைகளை விசாரணை செய்தல் கூட்டுறவு ஊழியர்களின் மேன்முறையீடுகளை அதிகாரிகள் என்ற வகையில் கட்டளைகளை வழங்கும் அதிகாரமும் இவ் ஆணைக்குழு விடய பரப்பினுள் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
############################
வெளிப்படைத்தன்மை மற்றும் நியாமான நிலையில் அமைக்கப்பட்டு சட்டரீதியான சட்டகத்தினுள் செயற்படுவதும், மறுப்பின்றி கூட்டுறவுக் கொள்கைகளுக்கு இணங்க தீர்மானங்களை எடுப்பதும் ஆணைக்குழுவின் சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும். அப்பணியினை செவ்வனே நிறைவேற்றுவதற்கு இவ்வாணைக்குழுவின் ஏனைய இரு உறுப்பினர்களாலும், செயலாளர் மற்றும் பணிக் குழாத்தினராலும் வழங்கும் ஆதரவு சாலப் பெரியது.
############################
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவினால் அண்மைக் காலத்தில் அடைந்து கொண்ட இன்னுமொரு விசேட வெற்றியினைக் குறிக்கும் மைல்கல்லாக இந்த இணையத்தளம் இன்றுடன் மக்கள் மயமாக்கப்படும்.
############################
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளனுள் பிரவேசிக்கும் மேல் மாகாணத்தின் எல்லா கூட்டுறவு ஊழியர் சமூகம் மற்றும் இவ்வாணைக்குழுவிடம் இருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள், ஆணைக்குழு மற்றும் அதன் பணிக் குழாத்தினர் சார்பாக அன்புடன் வரவேற்கின்றேன்.
############################
மிகச் சிறந்த சேவையினை வழங்குவதற்கான இம்முயற்சியினை நிறைவெற்றுக் கொள்ளும் பொருட்டு, வாடிக்கையாளரான உங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எனது மதிப்பீட்டுக்கு ஆளாகும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
###################
திரு. எச்.ஏ. ஹெட்டிஆரச்சி
தலைவர்
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு
மேல் மாகாணம்