மேல் மாகாண தெருக்கள், போக்குவரத்து. கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் வர்த்தகம், வீடமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி தொடர்பிலான கௌரவ அமைச்சர் லலித் வனிகரத்ன அவர்களின் செய்தி …………….
###################################
மேல் மாகாணம் முழுதும் பரந்து காணப்படும் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக மாகாண மக்களுக்கு கூட்டுறவுச் சேவைகளை வழங்குவதன் பொருட்டு அர்ப்பணிப்புடன் உள்ள கூட்டுறவு ஆளணியினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
###################################
அக்கூட்டுறவு ஊழியர் சமூகம் சார்பாக மேல் மாகாண ஊழியர் ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்படும் சேவைகள் குறித்து எனது மனமுவந்த பாராட்டுதல்கள் உரித்தாகும்.
###################################
அச்சேவைகளை மென்மேலும் விருத்தி செய்து, தமது வாடிக்கையாளரின் நலனுக்காக தமது இணையத்தளத்தை மக்கள்மயப்படுத்தும் மேல் மாகாண ஊழியர் ஆணைக்குழுவிற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் வழங்க விரும்புகின்றேன்.
###################################
மேல் மாகாணத்தில் அனைத்து கூட்டுறவு ஊழியர் குழாத்தினருக்கும் விலைமதிப்பற்ற சேவையினை வழங்கும் நோக்கத்தை கருத்தாய் கொண்டு, ஆணைக்குழு மற்றும் அதன் பணிக்குழாத்தினரால் எடுக்கப்படும் முயற்சி, பிரதேச மக்களுக்கு திருப்திகரமான கூட்டுறவுச் சேவையினை வழங்குவதற்கு வழிகோலும் என நான் எதிர்நோக்குகின்றேன்.
###################################
############################
லலித் வனிகரத்ன
மாகாண தெருக்கள்இ போக்குவரத்து. கூட்டுறவூ அபிவிருத்தி மற்றும் வர்த்தகம்இ வீடமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள்இ தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்இ கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி தொடர்பிலான அமைச்சர் (மே.மா.)